தாய்லாந்தின் சில பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பேரிடம், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இராணுவக் கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை அதிகாரிகள் அனுப்பத் தூண்டியுள்ளன.
கடந்த வாரத்தில் நாட்டின் தெற்கில் உள்ள பத்து மாகாணங்களை வெள்ளம் பாதித்துள்ளது.
மலேசியாவின் எல்லையை ஒட்டியுள்ள வணிக மையமான ஹாட் யாய் நகரம், 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ளது – ஒரே நாளில் 335 மி.மீ.
இடைவிடாத மழை அண்டை நாடுகளையும் நாசமாக்கியுள்ளது.
வியட்நாமில், ஒரு வாரத்தில் இறப்பு எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் மலேசியாவில், 19,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தாய்லாந்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் 13,000 பேர் மட்டுமே தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பெரும்பாலானோர் உதவி பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


















