மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இவ்வீதி போக்குவரத்தின்றி முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று ஒருவழி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.














