நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரை கல்வி பொது .தராதர உயர் தரப் பரீட்சை உள்ளிட்ட அனைத்துப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்திற்காக பாடசாலைகள் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.














