யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் விளக்கமறியல் கைதியின் சகோதரிக்கு எதிராக , யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகத்தினரால் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பை சேர்ந்த இளைஞன் ஒருவர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியல் கைதியாக யாழ்ப்பாண சிறைச்சாலையில் ,தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் இன்றைய தினம் வரையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞனின் சகோதரி நேற்று முன்தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது , கடந்த 08ஆம் திகதி தனது சகோதரன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தான் சகோதரனிடம் கேட்ட போது அவரை அடித்ததாக கூறியதாக சகோதரி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் , குறித்த இளைஞன் சிறைச்சாலையில் , விழுந்தமையால் தான் தலையில் காயமடைந்ததாகவும் , சிறைச்சாலைக்குள் யாரும் அவரை தாக்கவில்லை என்றும் சிறைச்சாலை நிர்வாகம் ஊடகங்களுக்கு பதில் அளித்திருந்தது.
அதனை அடுத்து நேற்றையதினம் , இளைஞனை சிறைச்சாலைக்கு தாக்கியதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்தமைக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகத்தினர் குறித்த சகோதரிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்














