தொலைதூர குடும்ப உறுப்பினரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை வழங்கும் திட்டம் தொடர்பில் இங்கிலாந்து அமைச்சரவை அமைச்சர்களினால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கத்தின் புதிய தொழிலாளர் உரிமைகள் சட்டமூலமானது மாமியார், மாமனார், மருமகள் மற்றும் மருமகன் உள்ளிட்ட உறவினர்கள் உயிரிழந்தால் ஊழியர்களுக்கு ஒரு வார விடுமுறை உரிமையை வழங்கும்.
18 வயதுக்குட்பட்ட குழந்தையின் மரணத்திற்கு மட்டுமே தற்போது இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள துக்க விடுமுறையை விரிவுபடுத்துவது, முன்னாள் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னரால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகள் சட்டமூலத்தின் கீழ் திட்டமிடப்பட்ட பல நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
எவ்வாறெனினும், சட்டமூலத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள ஏற்கனவே தயாராக இருக்கும் நிறுவனங்கள் இந்த சட்டமூலமானது தொழிற்துறையில் ஏற்கனவே போராடி வரும் வணிகங்கள் மீது குறிப்பிடத்தக்க செலவுகள் மற்றும் நிர்வாகச் சுமைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளன.













