மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (11) அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதேநேரம், இந்தியாவின் கலாச்சார, இலக்கிய மற்றும் தேசிய உணர்வுக்கு அவர் அளித்த நீடித்த பங்களிப்புகளையும் பாராட்டினார்.
இது குறித்து எக்ஸில் பதிவிட்ட அவர், பாரதியார் “தைரியத்தைத் தூண்டிய” ஒரு நபர் என்றும், அவரது எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாக இந்தியர்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் விவரித்தார்.
இலக்கியச் சின்னமாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் கவிஞரின் இரட்டை மரபை எடுத்துரைத்த பிரதமர், பாரதி இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது மட்டுமல்லாமல், நீதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை நோக்கிய முயற்சிகளுக்கும் ஊக்கமளித்தார் என்றார்.
புரட்சிகரக் கவிஞர், பத்திரிகையாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என்று பரவலாகக் கருதப்படும் பாரதியார், இந்திய இலக்கியத்திலும் வரலாற்றிலும் ஒரு சின்னமான நபராகத் தொடர்கிறார்.
அவரது படைப்புகள் இலக்கிய வட்டாரங்களில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி, சமூக சீர்திருத்தத்தை ஊக்குவித்து, இந்தியாவின் கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.















