கம்போடியாவுடனான எல்லையில் சுமார் ஒரு வாரமாக நீடித்த புதிய மோதல்களுக்குப் பின்னர், தாய்லாந்து நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை (12) கலைக்கப்பட்டுள்ளது.
அடுத்த 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும்.
நாடாளுமன்றம் கலைப்பு தொரட்பாக தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் (Anutin Charnvirakul) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரச ஆணையில், மூன்று மாதங்களுக்கு முன்பு பதவியேற்றதிலிருந்து தனது சிறுபான்மை அரசாங்கம் கட்டுப்படுத்த போராடி வரும் பிற சவால்களில், கொடிய எல்லைப் பிரச்சினையையும் மேற்கோள் காட்டினார்.
அதனால், நாடாளுமன்றத்தைக் கலைப்பதே பொருத்தமான தீர்வு என்றும், இது இது மக்களிடம் அரசியல் அதிகாரத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான ஒரு வழியாகும் என்றும் அவர் கூறினார்.
தொழில் அதிபரான அனுடின், 2023 ஆகஸ்ட் முதல் தாய்லாந்தில் பதவியேற்ற மூன்றாவது பிரதமர் ஆவார்.
கடந்த செப்டம்பரில் அவர் ஆட்சிக்கு வந்தபோது, 2026 ஜனவரி மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தை கலைப்பதாகக் கூறினார்.

கடந்த மாதம் தெற்கு தாய்லாந்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தை கையாண்டதற்காக அனுடினும் அவரது பூம்ஜைதாய் கட்சியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
இந்த அனர்த்தத்தினால் குறைந்தது 176 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், கம்போடியாவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டபோது, குறைந்தது 20 பேர் உயிரிழந்தும் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொண்ட அனுடின், இப்போது நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு வழிவகுத்துள்ளார்.


















