திருத்தந்தை 14 ஆம் லியோ, தனது திருச்சபையின் முதல் கிறிஸ்துமஸ் திருப்பலியை புதன்கிழமை நள்ளிரவு நடத்தினார்.
வழிபாட்டிற்கு முன்னதாக போப் லியோ செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நம்பிக்கை, நன்கொடை ஆகியவைக் கிறிஸ்துமஸைக் குறிப்பதாகப் போப் லியோ வழிபாட்டின் போது குறிப்பிட்டார்.

முன்னதாக, அவர் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா முன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துப் பேசினார், மழை பெய்தாலும் வெளிப்புறத் திரைகளில் திருப்பலியைப் பின்பற்ற வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“செயின்ட் பீட்டர்ஸ் மிகப் பெரியது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது உங்கள் அனைவரையும் வரவேற்கப் போதுமானதாக இல்லை” என்று அவர் சுமார் 5,000 பேர் கூடியிருந்த கூட்டத்தில் கூறினார்.
கடந்த ஏப்ரல் 21 அன்று உயிர்நீத்த தனது முன்னோடி பிரான்சிஸை விட அமெரிக்க போப் மிகவும் விவேகமான மற்றும் மிதமான பாணியை ஏற்றுக்கொண்டார்.
இந்த திருப்பலியில் உயர் பதவியில் உள்ள திருச்சபை பிரமுகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சுமார் 6,000 விசுவாசிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழா இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுகிறது மற்றும் கத்தோலிக்க திருச்சபை நாட்காட்டியில் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகும்.
போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகளை நடத்தும் நடைமுறையிலிருந்து போப் லியோவின் நடைமுறை வேறுப்பட்டிருந்தது.
போப் பிரான்சிஸ் முன்கூட்டியே கிறிஸ்துமஸ் பிரார்த்தனையை நடத்திவிடுவார்.
ஆனால் போப் லியோ சற்று தாமதமாகப் பிரார்த்தனையை நடத்தினார்.
1978 ஆண்டு முதல் 2005 ஆண்டு வரை காலஞ்சென்ற போப் ஜான் பால் (John Paul) அந்த வழிமுறையைக் கடைப்பிடித்தார்.
அந்தப் பாரம்பரியத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார் போப் லியோ.
அவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று இன்னொரு பிரார்த்தனையையும் நடத்தவிருக்கிறார்.
இதேவேளை போப் லியோ, செவ்வாயன்று உலகம் முழுவதும் ஒரு உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார், உக்ரேனில் ஒரு அமைதிக்கான கோரிக்கையை வெளிப்படையாக ரஷ்யா நிராகரித்தது குறித்து மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

















