யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக இளைஞர்கள் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், குறித்த பெண்ணை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இதேவேளை , போதை மாத்திரைகளுடன் இருவரும் , மாவா பாக்குடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை நடத்தும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

















