• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய  வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/08
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
யாழ்ப்பாண  மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம்  மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய  அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு இ. நாகராஜன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும், கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இலங்கை இந்திய பக்தர்கள் கலந்து கொள்ளும் பெரும் திருவிழாவாக    முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய கடற்படை மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களுக்கு  நன்றியினைத் தெரிவித்துக்கொண்டதுடன், கடந்த வருடம் 9,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதும், இந்தியாவிருந்து 4364 பக்தர்கள் உள்ளடங்கலாக 7,464 பக்தர்கள் வரை  கலந்துகொண்டார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும், கச்சத்தீவு மனிதர்கள் இல்லாத தனித்தீவாக  இருப்பதனால் சகல ஏற்பாடுகளுடன்  நடப்பாண்டு திருவிழா கடந்த ஆண்டு திருவிழா ஒழுங்கமைப்பினைக் காட்டிலும் மேலும்  புனிதமாக சிறப்பாக நடைபெற வேண்டும் எனவும், கடந்த ஆண்டு ஏதாவது சில குறைபாடுகள் இருப்பின் அதனை இக் கலந்துரையாடலில் தெரிவித்து, அவை குறித்து அதிக கவனம் செலுத்தி ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இது அமையவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், திருவிழாவுக்கு சகலரது ஒத்துழைப்பு பிரதானமானதென சுட்டிக்காட்டியத்துடன்,  இத் திருவிழா சிறப்புற நடைபெற அனைவரும் கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சிறப்பான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு இந்திய மற்றும் இலங்கை பக்தர்களின் வசதிக்காக வினைத்திறனுடன் பணியாற்ற வேண்டுமென அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி – ஒளி வசதிகள், கடல் மற்றும்  தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், தனியார் கடற்போக்குவரத்து படகுகளின் கட்டண நிர்ணயம், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மேற்படி கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் பிரதானமாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்குமென 8000 யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான வசதிகளை மேற்கொள்ளுதல்.
2.குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1200.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும்,  குறிகட்டுவானிலிருந்து 46 தனியார் படகுகள் சேவையில் ஈடுபடும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3.போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையினரின் பேரூந்துக்களும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் 27 ஆம் திகதி காலை 4.00 மணி முதல் பி. ப 01.00 மணி வரை  யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திலிருந்து பேரூந்துக்கள் புறப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
4.பக்தர்களுக்கு 28 ஆம் திகதி காலை உணவு இலவசமாக வழங்குவகும் தீர்மானிக்கப்பட்டது.
5.கடற்படையினரின் ஒழுங்கமைப்பில் கச்சதீவில் ஒரு  அம்புலன்ஸ் படகும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  அவர்களின் ஒழுங்கமைப்பில் 02 அம்புலன்ஸ் வண்டிகள் குறிகட்டுவானிலும் தயார் நிலையில் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு பிரதேச சபையின்  தவிசாளர், மேலதிக அரசாங்க அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பாதுகாப்பு படைகளின் அதிகாரி, யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்,  உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை),  கடற்படை அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், படகு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdateAthavan NewsDirector of Regional Health ServicesPreliminary discussionகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம்தனியார் படகுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வைத்தியர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Next Post

கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி

Related Posts

வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்
இலங்கை

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

2026-08-27
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!
இலங்கை

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

2026-08-27
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!
இலங்கை

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

2026-08-27
22 ஆவது திருத்தத்துக்கு BASL கடும் எதிர்ப்பு: நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்தில்? 
இலங்கை

நீதித்துறையின் சுதந்திரம் குறித்த வழக்கறிஞர் சங்கத்தின் அறிக்கை!

2026-08-27
அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்-  பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!
இலங்கை

அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்- பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!

2026-08-27
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!
இலங்கை

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

2026-08-27
Next Post
கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி

கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘ஜன நாயகன்’ திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது!

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் 'ஜன நாயகன்' திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது!

நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் தீவிர  முயற்சிகள் தோல்வி.

நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் தீவிர முயற்சிகள் தோல்வி.

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

0
வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

0
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

0
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

0
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

0
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

2026-08-27
வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

2026-08-27
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

2026-08-27
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

2026-08-27
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

2026-08-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.