உகாண்டா ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான யோவேரி முசவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 40 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் அவருக்கு எதிராக பிரபல பொப் பாடகரும் எதிர்கட்சித் தலைவருமான பொபி வைன் என்பவர் போட்டியிட்டார்.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் யோவேரி முசவேனி 71 சதவீத வாக்குகளைபெற்று வெற்றிபெற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரான பாபி வைன் எனப்படும் கியகுலானி சென்டாமு 24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதவேளை, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே முசெவேனி 76 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்ததாகவும், இந்த தேர்தல் ஒரு நாடகம் என்றும் பொபி வைன் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், தேசிய ஒற்றுமை மேடை கட்சியின் தலைவரான பொபி வைன் வீட்டை இராணுவத்தினர் சுற்றி வளைத்து வீட்டுச் சிறையில் வைத்திருந்தனர்.
ஆனால், நேற்றுமுன்தினம் (16) திடீரென அவரது வீட்டின் வளாகத்திற்குள் ஒரு இராணுவ ஹெலிகொப்டர் தரையிறங்கி அவரை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் National Unity Platform தலைவரான பாபி வைன், இராணுவம் மற்றும் பொலிஸார் தனது வீட்டை முற்றுகையிட்ட போதிலும், தான் அங்கிருந்து தப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தத் தேர்தல் முடிவுகள் போலியானவை எனத் தெரிவித்து அவற்றை நிராகரித்துள்ள அவர், அவற்றை அலட்சியப்படுத்துமாறு தனது ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.














