முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாந வழக்கில் அவரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (28) பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகிய நிலையில் அவரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் இன்று பிற்பகல் முன்னிலையான போதே நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் முன்னிலையாவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











