கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக, முன்னெடுக்கப்படுகின்ற உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மேலுமொருவர், இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைக்குமாறு கோரி, கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம், இன்று நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை மட்டக்களப்பை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தரின் உடன்நிலை ஆபத்தான நிலையில் காணப்பட்ட நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.













