காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதற்காக கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், வரைபடங்கள் மற்றும் நில அளவைத் திணைக்களத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில், இன்று காத்தான்குடி நகர சபைத் தவிசாளரின் அலுவலகத்தில் பரிசீலிக்கப்பட்டன.
இதன்போது, குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு மேலதிகமாக தேவைப்படும் விடயங்களை தாமதமின்றி ஆவணப்படுத்தி சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி நகரசபைத் தவிசாளரிடம் கோரிக்கை விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கமைய, இவ்வேலைத்திட்டம், நீண்டகாலமாக பிரதேச அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், நேற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
குறித்த பிரதான பஸ் தரிப்பு நிலைய வேலைத்திட்டம், உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது
















