காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் டொக்டர்ஸ் வித்தவுட் வோர்டர்ஸ் (Doctors Without Borders) அமைப்பை இஸ்ரேல் தடை செய்துள்ளது.
பலஸ்தீன ஊழியர்களின் பட்டியலை வழங்க மறுத்ததை அடுத்து, அந்த அமைப்பை தடை செய்துள்ளதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது.
இது தொடர்பில் இஸ்ரேலிய புலம்பெயர் விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,
ஜனவரி தொடக்கத்தில் அமுலுக்கு வந்த விதிமுறைகளின் கீழ் காஸா மற்றும் மேற்குக் கரையில் செயற்படும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து இஸ்ரேல் கோரிய உள்ளூர் ஊழியர்களின் பட்டியலை சமர்ப்பிக்கத் தவறியதை காரணம் காட்டி காஸாவில் உள்ள உதவிக் குழுவின் செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது.
புதிய பதிவுத் தேவைகளின் கீழ், எல்லைகள் இல்லாத வைத்தியர்கள் பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள்’அதன் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு காஸா பகுதியை விட்டு வெளியேற வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
பலஸ்தீன ஊழியர்களை பெரிதும் நம்பியுள்ள எல்லைகளற்ற வைத்தியர்கள் , மோதல் முழுவதும் காஸாவில் அவசர மருத்துவ சேவையை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.















