இலங்கையின் உத்தியோகப்பூர்வ நிதி கையிருப்பு சொத்துக்கள் 2026 ஜனவரியில் 0.2% ஓரளவு சரிவைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கிய வெளியிட்ட அண்மைய தரவுகளின்படி,
2025 டிசம்பர் இறுதியில் 6,838 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 2026 ஜனவரி இறுதிக்குள் 6,824 மில்லியன் அமெரிக்க டொலர்களாக சற்றுக் குறைந்துள்ளது.
அதிகாரப்பூர்வ கையிருப்பின் மிகப்பெரிய அங்கமான அந்நிய செலாவணி இருப்பு, இந்த மாதத்தில் 1% குறைந்து, 6,747 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 6,680 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.
இதற்கிடையில், மத்திய வங்கியின் தங்க இருப்புக்கள் 2026 ஜனவரியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்தன.
இது 86 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 109 மில்லியன் அமெரிக்க டொலர்களாக 26.8% அதிகரித்துள்ளது.
சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள அந்நியச் செலாவணி பரிமாற்ற வருமானம் அதிகாரப்பூர்வ இருப்பு சொத்துக்களில் அடங்கும்.
அவை பயன்பாட்டுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டது.
















