பொகவந்தலாவ கொட்டியாகலை மேல் பிரிவு 05ம் இலக்க தேயிலை மலையில் பண்டிக்கு விரிக்கப்பட்டிருந்த வலையில் பாரிய சிறுத்தை புலியின் சிக்குண்டு சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் நேற்று இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சிறுத்தையின் சடலத்தை இனங்கண்ட தோட்ட பொதுமக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொகவந்தலாவ பொலிஸார் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர் இதேவேளை குறித்த சிறுத்தை புலி உணவு தேடி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
சிறுத்தை புலிக்கு கம்பி வலை விரித்த சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதோடு சிறுத்தையின் சடலம் ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
உயிர்ழந்த சிறுத்தை 04அடி நீளம் கொண்ட ஆண் சிறுத்தை என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது















