முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கூறப்படும் ரூ.740 மில்லியனுக்கும் அதிகமான நிதியை மோசடி செய்வதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நிமல் சிசிர குமார மற்றும் அவரது உறவினர் பண்டார ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் தொடக்கத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நிமல் சிசிர குமார, நீதிவான் முன்னிலையில் சுமார் ஒரு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர், இரண்டு சந்தேக நபர்களையும் தலா 5 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சந்தேக நபர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்த நீதிபதி, அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.














