பிரபல பல்பொருள் அங்காடியில் கொள்ளையில் ஈடுபட முற்பட்ட ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இச்சம்பவம் பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Avenue de Versaillesவீதியில் அமைந்துள்ள Gifi அங்காடிக்கு கொள்ளையன் ஒருவன் நுழைந்துள்ளார். கொள்ளையிடுவதற்காக முதலில் கண்ணீர் புகை குண்டு ஒன்றை வீசியுள்ளான்.
குறித்த Gifi அங்காடியின் மேலாளர் கத்தி ஒன்றை உருவி எடுத்து ,கொள்ளையிட வந்த நபரை துரத்தியுள்ளதுடன் , அவன் அங்காடிக்குள் இருந்து வெளியேறி வீதியில் ஓட, அவரை வீதி வரை துரத்திக்கொண்டு சென்ற மேலாளர், நடுவீதியில் வைத்து கத்தியால் குத்தியுள்ளதுடன் , பின்னர் அவரே பொலிசாரையும் அழைத்துள்ளார்.
விரைந்து வந்த பொலிசார், காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, தாக்குதல் மேற்கொண்ட மேலாளரை கைதும் செய்தனர்.
விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.



















