பனிச்சறுக்கு சாகச விளையாட்டு ஆண்டுதோறும் பலரது உயிரை பலியெடுக்கிறது. கடந்த மூன்று நாட்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு ஆல்ப்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளனர். 38 வயதுடைய ஒருவரும், வயது குறிப்பிடப்படாத ஒருவரும் என இருவர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, சனிக்கிழமை இருவர் உயிரிழந்திருந்தனர். இவ்வாறு கடந்த மூன்று நாட்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்
இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை பிரான்ஸ், ஒஸ்ரியா, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்து மொத்தமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர்














