பாலியல் குற்றவாளிகள் தங்கள் உறவில் ஏற்படும் கர்ப்பம் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கத் தவறினால், அவர்களை மீண்டும் சிறைக்கு அனுப்பலாம் என்று தேசிய பாதுகாப்பு மறுஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த ஆய்வு, சிறுமி விக்டோரியா என்ற குழந்தையின் உயிரிழப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
விக்டோரியா தனது தாய்(Constance Marten) கான்ஸ்டன்ஸ் மார்டன் மற்றும் தந்தை (Mark Gordon) மார்க் கார்டன் ஆகியோரால் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 38 வயதான மார்டன் மற்றும் 51 வயதான ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற அவரது துணைவர் மார்க் கார்டன் , சமூக நல அமைப்புகளிடமிருந்து தப்பிக்கத் தங்கள் குழந்தையுடன் தலைமறைவாகினர்.
இவர்களின் முந்தைய நான்கு குழந்தைகளும் ஏற்கனவே அரசுப் பராமரிப்பிற்கு (Social Services) மாற்றப்பட்டிருந்தனர்.
இதேவேளை, தாய்(Constance Marten) கான்ஸ்டன்ஸ் மார்டன் மற்றும் தந்தை (Mark Gordon) மார்க் கார்டன் ஆகியோருக்கு பிறந்த விக்டோரியாவின் உடல் தலைமறைவாகியிருந்த இடத்திலிருந்து ஒரு துணிப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
குழந்தையைக் கொன்றதற்காக மார்டன் மற்றும் கார்டனுக்கு மொத்தம் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நடைமுறை ஆய்வுக் குழு (Child Safeguarding Practice Review Panel) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் , மார்க் கார்டன் போன்ற பாலியல் குற்றவாளிகள் தங்கள் உறவில் ஒரு பெண் கர்ப்பமானால், அதை அதிகாரிகளிடம் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் இதை மீறுபவர்கள் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.














