• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
டி:20 உலகக் கிண்ணம்; நமீபியாவை 93 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!

டி:20 உலகக் கிண்ணம்; நமீபியாவை 93 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/13
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல்லியில் நேற்றிரவு (12) நடைபெற்ற ஐசிசி 2026 டி:20 உலக் கிண்ணத்தின் 18 ஆவது போட்டியில் நமீபியாவை 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்னர், இந்திய அணி குழு ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.

தொடர்ச்சியான இரண்டாவது வெற்றிக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி பாகிஸ்தானிடமிருந்து முதலிடத்தை தட்டிப் பறித்தது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு 07.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணியானது பந்துப் பரிமாற்றம் மேற்கொள்வதற்கு தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் மற்றும் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான அரைசதங்களால் 9 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களை எடுத்தது.

இஷான் கிஷான் 24 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்.

அதேநேரம் ஹர்த்திக் பாண்டியா பாண்டியா 28 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்து ஐந்தாவது விக்கெட்டுக்கு சிவம் துபேவுடன் (16 பந்துகளில் 23 ஓட்டங்கள்) 81 ஓட்ட கூட்டணியைப் பகிர்ந்து கொண்டார்.

இதேவேளை, இந்திய அணியானது இன்னிங்ஸின் இறுதி 11 பந்துகளில் நான்கு ஓட்டங்களுக்கு இரண்டு ரன் அவுட்கள் உட்பட ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. 

18.1 ஓவர்களில் இந்தியா 205/4 என்று இருந்தது, அவர்கள் தங்கள் இன்னிங்ஸை 209/9 என்று முடித்தது.

முன்னதாக, ஏழாவது ஓவரில் இந்தியா 100 ஓட்டங்களை கடந்தது, ஆனால் இறுதியில் நான்கு ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தமை போட்டியின் விசேட அம்சமாகும்.

பந்து வீச்சில் நமீபியா அணித் தலைவர் கெர்ஹார்ட் எராஸ்மஸ் 4 ஓவர்களுக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 20 ஓட்டங்களை வழங்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 18.2 ஓவர்களில் 116 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

சில வீரர்கள் தொடக்கம் தந்தாலும், அவர்களால் பெரிய ஓட்ட இலக்கிற்கு சல்ல முடியவில்லை.

அதிகபட்சமாக லூரன் ஸ்டீன்காம்ப் 29 ஓட்டங்கள் எடுத்தார். 

பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி இரண்டு ஓவர்களில் 7 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவர் தவிர அக்ஸர் படேல் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Image

Related

Tags: INDIANamibiaT20 World Cupஇந்தியாடி:20 உலகக் கிண்ணம்நமீபியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் வளர்ச்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு – ஆசிய அபிவிருத்தி வங்கி!

Next Post

பெய்ஜிங்குடனான பதட்டங்களுக்கு மத்தியில் சீனக் கப்பலைக் கைப்பற்றிய ஜப்பான்!

Related Posts

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்
இலங்கை

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

2026-03-15
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!
இலங்கை

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

2026-03-15
மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு
இலங்கை

மத்திய கிழக்கு போரினால் உருவாகும் நிலைமை குறித்து ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு

2026-03-15
விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு
இலங்கை

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு

2026-03-15
Next Post
பெய்ஜிங்குடனான பதட்டங்களுக்கு மத்தியில் சீனக் கப்பலைக் கைப்பற்றிய ஜப்பான்!

பெய்ஜிங்குடனான பதட்டங்களுக்கு மத்தியில் சீனக் கப்பலைக் கைப்பற்றிய ஜப்பான்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்!

எகிப்து பிரமிட் கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள்!

எகிப்து பிரமிட் கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.