2026 ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு20 (வு20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியில் பங்கேற்பதற்காகஇ இந்திய கிரிக்கெட் அணி இன்று நாட்டை வந்தடைந்தது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.















