இந்தியா தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீன் பிடி விசைப்படகு முந்தைய ஆட்சியில் வழங்கிய நிவாரணத் தொகை போல இந்த ஆட்சியிலும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை நடாத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர் வரும் 30ஆம் திகதியிலிருந்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், செப்டம்பர் 1ஆம் திகதியிலிருந்து தங்கச்சிமடத்தில் இதே
கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.














