முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டலொன்றின் அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பொலிஸ் பரிசொதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னர் அவர் வெளிநாட்டிற்கு சென்றிருந்த நிலையில் நேற்று மீண்டும் நாடுதிரும்பிய போது அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இதேவேளை சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தநிலையில் அப்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னக்கோன்மீது நேரடியாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன் விசாரணைகளின் அடிப்படையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
UPDATE
வெலிகம W-15 ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி ஜகத் நிஷாந்தவை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.















