மத்திய கிழக்கில் நடந்து வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த அமெரிக்கா இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் அறிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒன் அமெரிக்கா ஓபன் நியூஸ் (OAN) அலைவரிசைக்கு அளித்த செவ்வியின் போது முன்னாள் அமெரிக்க இராணுவ கர்னல் டக்ளஸ் மேக்ரிகோர் இந்தக் கூற்றை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்தியாவின் இந்த அறிக்கை வந்துள்ளது.
நேர்காணலின் போது, அமெரிக்கா தனது சொந்த தளங்கள் மற்றும் துறைமுக வசதிகள் சேதமடைந்த பின்னர் இந்திய துறைமுகங்களை நம்பியிருப்பதாக மெக்ரிகோர் குறிப்பிட்டார்.
எவ்வாறெனினும் இந்திய வெளிவிவகார அமைச்சு இந்தக் கூற்றினை நிரகாரித்துள்ளது.
அமெரிக்க கடற்படையால் இந்திய துறைமுகங்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு அலைவரிசையான OAN இல் கூறப்படும் கூற்றுகள் போலியானவை மற்றும் தவறானவை.
இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக நாங்கள் எச்சரிக்கிறோம் வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் கூறியது.
அதேநேரம், ஈரானிலும் பரந்த மேற்கு ஆசிய பிராந்தியத்திலும் அதிகரித்து வரும் மோதலை உடனடியாக நிறுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு செவ்வாயன்று அழைப்பு விடுத்தது.
நீடித்த உறுதியற்ற தன்மை இந்திய குடிமக்கள், பொருளாதார நலன்கள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது.













