• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/26
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச சேவையை  சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24) பிற்பகல் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத் தடையின்றி வழங்குவது குறித்தும், அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, சுகாதாரம், கல்வி, நீதி ஆகிய அமைச்சுகளின் சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இங்கு ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கும், வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரத போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலதிகமாக, வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமையை மேம்படுத்துவதற்கும், தற்போதுள்ள சேவைகளை விரைவுபடுத்துவதற்காக டிஜிட்டல் சேவை அமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. 

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இந்த நடவடிக்கைகள் கண்காணிக்கவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தற்போதைய வலுசக்தி முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, தேவையான கொள்கை மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

No photo description available.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எம்.எச். அபேரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் டி.எம். உதயங்க ஹேமபால, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் டி.ஆர்.டபிள்யூ.எஸ். தனபால, நீதி மற்றும்  தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ்.எஸ். ராஜகருணா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள்  இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

 

 

Related

Tags: Harini Amarasuriyaஅமைச்சரவைஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

Next Post

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை – ஈரான் அறிவிப்பு!

Related Posts

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்
இலங்கை

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்

2026-08-10
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் தலையில்லா முண்டமாக என்புக்கூடு அடையாளம்!!

2026-08-10
அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்
இலங்கை

அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்

2026-08-10
இஷாரா செவ்வந்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!
இலங்கை

இஷாரா செவ்வந்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

2026-08-10
மரண தண்டனைக் கைதியைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரப்படுகிறது!
இலங்கை

மரண தண்டனைக் கைதியைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரப்படுகிறது!

2026-08-10
ரத்மலானா சைமாவும் மேலும் மூவரும் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!
இலங்கை

ரத்மலானா சைமாவும் மேலும் மூவரும் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

2026-08-10
Next Post
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை – ஈரான் அறிவிப்பு!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை - ஈரான் அறிவிப்பு!

எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வு!

எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வு!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.