சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் ஏழு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, 14 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதான.
சேவை தேவையின் கருதியே இந்த நியமனங்களும் இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.












