இலங்கையின் தென்கடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் சரக்கை ஏற்றிச் சென்ற உள்ளூர் பலநாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று டிக்கோவிட்டா மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய பல நாள் மீன்பிடி படகு நேற்று (16) இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைப்பற்றப்பட்டது.
இதன்போது, படகில் இருந்த 4 சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படையின் நீண்ட தூர செயல்பாட்டுக் கப்பல் பிரிவு நடத்திய நடவடிக்கையைத் தொடர்ந்து, படகும், மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் கைப்பற்றப்பட்ட பொதிகள் இன்னும் பரிசோதிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.













