பிரிட்டனில் பட்டியலிடப்பட்டுள்ள சுகாதார நிறுவனமான மேம்பட்ட மருத்துவ தீர்வுகள் குழு Advanced Medical Solutions Group (AMS) நிறுவனத்தை கைப்பற்றுவதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட தனியார் முதலீட்டு நிறுவனம் TA Associates, AMS நிறுவனத்தை சுமார் £600 மில்லியன் மதிப்பில் வாங்குவதற்கான முன்மொழிவை சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் ஒரு பங்கிற்கு சுமார் 280 பென்ஸ் என்ற அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்திற்கு AMS நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்தால், நிறுவனம் £600 மில்லியனைத் தாண்டிய மதிப்பை பெறும். இது சமீப காலங்களில் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்கள் தனியார் முதலீட்டாளர்களின் கைகளுக்கு மாறும் போக்கின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
இதேவேளை , மேம்பட்ட மருத்துவ தீர்வுகள் குழு( Advanced Medical Solutions Group) நிறுவனம், அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் லிக்விபேண்ட் (LiquiBand ) மற்றும் ரெசோர்பா (Resorba) போன்ற பிரபல தயாரிப்புகளை உருவாக்குகிறது.
இந்த ஒப்பந்தம் இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் நிறைவேறுமானால், பிரிட்டனின் சுகாதாரத் துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது














