பிரித்தானியாவில் விமானங்கள் அதிகளவில் தாமதமாகும் விமான நிலையங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் விமான நிலையங்களில் கடந்த ஆண்டில் விமானங்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்த தரவுகளை ‘பிரஸ் அசோசியேஷன்’ (PA) ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
இதில் மன்செஸ்டர் விமான நிலையம் மிகக் கூடுதலான தாமதத்தைப் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது.
சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் (CAA) தரவுகளின்படி, மன்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானங்கள் சராசரியாக 19 நிமிடங்கள் 30 விநாடிகள் தாமதமாகப் புறப்பட்டுள்ளன.
2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 30 விநாடிகள் முன்னேற்றம் என்றாலும், நாட்டின் ஏனைய விமான நிலையங்களை விட இதுவே அதிகபட்ச தாமதமாகும்.
பிரித்தானியாவின் 23 வர்த்தக விமான நிலையங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக விமானத் தாமதத்தின் சராசரி அளவு 14 நிமிடங்கள் 54 விநாடிகளாகக் குறைந்துள்ளது.
பர்மிங்காம் மற்றும் போர்ன்மவுத் போன்ற விமான நிலையங்களும் இப்பட்டியலில் பின்தங்கியுள்ளன.
இதேவேளை, நாட்டின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையமான மன்செஸ்டர், தற்போது தனது முனையங்களைப் (Terminals) புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














