கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பகல் நேரத்தில் நடந்த 10 சொத்து மற்றும் தங்க நகைகள் திருட்டு வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரையும் அவரது மனைவியையும் கிளிநொச்சி பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையின் பரிசோதகர் பஸ்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஒன்று, நேற்று (13) சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த ஒருவரை விசாரித்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு சந்தேகத்திற்கிடமான கொள்ளைச் சம்பவம் வெளிக்கொண்டு வரப்பட்டது.
இதன்போது, கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய வாடகைதாரர் ஒருவர் முக்கிய சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட பொருட்களைப் பாதுகாத்து வைப்பதிலும், அவற்றுக்கு ஆதரவளிப்பதிலும் ஈடுபட்டிருந்த அவரது 20 வயது மனைவியும் பாரதிபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவான 10 பகல் நேர வீட்டுக் கொள்ளைச் சம்பவங்களில் இவ்விருவரும் நேரடியாக ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட தங்கப் பொருட்களில் ஒரு பகுதியை சந்தேக நபர்கள் இரண்டு தனியார் அடகு நிலையங்களிலும், மன்னார் வங்கி கிளையிலும் அடமானம் வைத்துள்ளனர்.
அடமானம் வைக்கப்பட்ட 49 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்களைக் கடண்டறிவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸாரும், குற்றப் புலனாய்வுத் துறையினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













