• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
“நட்சத்திரமாக வந்து ஜாம்பவானாக விடைபெறுகிறார்” – பார்சிலோனா அணியில் இருந்து விலகுகிறார் ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி!

“நட்சத்திரமாக வந்து ஜாம்பவானாக விடைபெறுகிறார்” – பார்சிலோனா அணியில் இருந்து விலகுகிறார் ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/17
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

பார்சிலோனா (Barcelona) கால்பந்து அணியின் முன்னணி நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (Robert Lewandowski), இந்த கோடைகாலத்துடன் தனது ஒப்பந்தம் நிறைவடைவதை அடுத்து, அணியில் இருந்து விலகப் போவதாக (நேற்று) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

போலந்து நாட்டைச் சேர்ந்த 37 வயதான இந்த மூத்த வீரர், தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் இது குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பேயர்ன் முனிச் (Bayern Munich) அணியில் இருந்து பார்சிலோனாவில் இணைந்த லெவாண்டோவ்ஸ்கி, அணியில் விளையாடிய 191 போட்டிகளில் மொத்தம் 119 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.

பார்சிலோனா நிதி நெருக்கடியிலும் சரிவிலும் இருந்த காலகட்டத்தில் அணியில் இணைந்து, அதனை மீண்டும் ஸ்பானிய கால்பந்தின் அரியணையில் ஏற்ற உதவினார்.

அவரது பங்களிப்புடன் பார்சிலோனா அணி இந்த நடப்பு சீசன் உட்பட மூன்று முறை ‘லா லிகா’ (La Liga) பட்டங்களையும், 2025 இல் கோபா டெல் ரே (Copa del Rey) கோப்பையையும் வென்று சாதனை படைத்தது.

அத்துடன், தனது அறிமுக சீசனிலேயே லா லிகா தொடரின் அதிக கோல்களை அடித்த வீரராகவும் அவர் திகழ்ந்தார்.

இதேவேளை, இன்று (17) ரியல் பெட்டிஸ் (Real Betis) அணிக்கு எதிராக காம்ப் நௌ (Camp Nou) மைதானத்தில் நடைபெறும் போட்டியே லெவாண்டோவ்ஸ்கி பார்சிலோனா சீருடையில் விளையாடும் கடைசிப் போட்டியாகும். அவர் இப்போட்டியில் ஆரம்ப வீரராகக் களம் இறங்குவார் என்பதை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹான்சி ஃபிளிக் (Hansi Flick) உறுதிப்படுத்தியுள்ளார்.

லெவாண்டோவ்ஸ்கி குறித்துப் பேசிய பயிற்சியாளர் ஃபிளிக், “அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் கூட. நான் அவருடன் பல வருடங்களாகப் பணியாற்றியுள்ளேன். நான் வென்ற 9 கோப்பைகளும் அவருடன் இணைந்து வென்றவைதான். இளம் வீரர்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்மாதிரி. அவர் ஒரு நட்சத்திரமாக வந்து, இன்று ஒரு ஜாம்பவானாக (Legend) விடைபெறுகிறார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

நடப்பு சீசனில் 44 போட்டிகளில் விளையாடி 18 கோல்களை அடித்துள்ள லெவாண்டோவ்ஸ்கி, தனது அடுத்தகட்ட பயணம் குறித்து இன்னும் இறுதி முடிவு எதையும் அறிவிக்கவில்லை. எனினும், அவர் சவூதி அரேபியா அல்லது அமெரிக்காவின் (USA) முன்னணி கிளப் ஒன்றில் இணையலாம் என விளையாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related

Tags: Foodballsports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முக்கிய துறைகளில் சிறப்பு கவனம்: முதல்வர் முடிவு!

Next Post

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியுதவி: மே 27 இல் சர்வதேச நாணய நிதியம் முக்கிய முடிவு!

Related Posts

165 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்திய இந்தியா தொடரில் முன்னிலை!
கிரிக்கெட்

165 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்திய இந்தியா தொடரில் முன்னிலை!

2026-08-19
காலியில் இந்தியா வெற்றியை நெருங்கியது: இலங்கைக்கு இன்னும் 288 ஓட்டங்கள் தேவை!
ஆசிரியர் தெரிவு

காலியில் இந்தியா வெற்றியை நெருங்கியது: இலங்கைக்கு இன்னும் 288 ஓட்டங்கள் தேவை!

2026-08-19
372 ஓட்டங்கள் இலக்கு: காலியில் வரலாறு படைக்குமா இலங்கை?
கிரிக்கெட்

372 ஓட்டங்கள் இலக்கு: காலியில் வரலாறு படைக்குமா இலங்கை?

2026-08-18
ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்!
உதைப்பந்தாட்டம்

ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்!

2026-08-18
சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!
கிரிக்கெட்

சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!

2026-08-18
சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

2026-08-18
Next Post
சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியுதவி: மே 27 இல் சர்வதேச நாணய நிதியம் முக்கிய முடிவு!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ பின்னணியில் இருந்த கறுப்புப் பண சாம்ராஜ்யம் அம்பலம்!

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

கல்கிஸ்ஸையில் சந்தேகத்திற்கிடமான மரணம்- பொலிஸ் விசாரணை தீவிரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

0
மூன்றாவது கண்டி கும்பல் பெரஹேராவிற்கான போக்குவரத்துத் திட்டம்!

மூன்றாவது கண்டி கும்பல் பெரஹேராவிற்கான போக்குவரத்துத் திட்டம்!

0
யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

0
தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!

தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!

0
பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.