மத்தியகிழக்கு போர் காரணமாக வணிக நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளின் தொடர்ச்சியாக, பிரித்தானியாவில் வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கையும் கடந்த ஐந்து ஆண்டுகளைவிட வீழ்ச்சியைக் கண்டுள்ளதுடன், வேலையின்மை விகிதமும் அதிகரித்துள்ளது.
பிரித்தானிய தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் வௌியாகியுள்ளன.
அதன்படி, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளின்படி, கடந்த பெப்ரவரி மாதம் 4.9% ஆக இருந்த வேலையின்மை விகிதம், மார்ச் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் 5% ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தியுள்ள முதல் தாக்கத்தை இந்தத் தரவுகள் காட்டுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போர் சூழல் நீடிக்குமாயின் , தொழிலாளர்களுக்கான தேவை மேலும் பலவீனமடையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ ஊதியப் பட்டியலில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையும் 100,000 ஆல் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















