இங்கிலாந்தின் ‘கிரேட்டர் மான்செஸ்டர்’ (Greater Manchester) பிராந்தியத்திற்கு உட்பட்ட டேம்சைடு (Tameside) உள்ளாட்சித் தேர்தலின் போது, வேட்புமனுத்தாக்கல் வழிமுறைகளில் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் தொழிற்கட்சி வெற்றிபெற்ற புனித பீட்டர்ஸ் வார்டைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 23 முதல் 47 வயதுக்கு இடைப்பட்ட நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.
நேற்று அதிகாலை டேம்சைடு பகுதியிலுள்ள பல வீடுகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 7 ஆம் திகதி நடைபெற்ற டேம்சைடு உள்ளாட்சித் தேர்தலின் போது வேட்புமனுத் தாக்கலில் மோசடி நடந்ததாக புகாரளிக்கப்பட்ட நிலையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












