பிரித்தானியாவின் நார்ஃபோக் (Norfolk) பிராந்தியத்தில், சிறுமிகளைக் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 7 இளைஞர்கள் மீது 40 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நார்விச் நகரில் உள்ள ஆறு முகவரிகளிலும், டம்பார்டன் நகரில் உள்ள ஒரு முகவரியிலும் கடந்த புதன்கிழமை நார்ஃபோக் காவல்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனைகளின் போது 20 மற்றும் 21 வயதுடைய இந்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள 7 பேரும் ‘அகதி’ (Refugee) அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் பிரஜைகள் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் சிறிய படகுகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், இவர்கள் யாரும் நார்ஃபோக்கில் உள்ள புகலிடம் கோருவோருக்கான தங்குமிடங்களில் வசிக்கவில்லை என்றும், இக்குற்றங்கள் அத்தகைய தங்குமிடங்களில் நடக்கவில்லை என்றும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டிலே இவர்கள் இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகவும்
இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 19 வயதுடைய எட்டாவது நபர் ஒருவர் அயர்லாந்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 7 ஆப்கானிஸ்தான் இளைஞர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.













