மோட்டார் சைக்கிள் திருட்டுகள் மற்றும் பெண்களின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபர் 17 கிராம் 800 மில்லி கிராம் “ஐஸ்” போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் மாகாண (தெற்கு) பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (23) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் 28 வயதுடைய பண்ணிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவராவார்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தங்கச் சங்கிலிகளிகளும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், சந்தேகநபர் கோட்டை, மீகொட, மிரிஹானை, மஹரகம, ஹோமாகம, மாலம்பே மற்றும் கிரேன்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இக்குற்றச்செயல்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண (தெற்கு) பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.













