• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/26
in இந்தியா, இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்குப் படகில் கடத்துவதற்காக , மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளதுடன் சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால், சமீபகாலமாக தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, சீனியப்பா தர்கா, களிமண்குண்டு, திருப்புல்லாணி மற்றும் பாம்பன் குந்துகால் உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள், உரம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சமையல் மஞ்சள் மூட்டைகள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே சீனியப்பன் தர்கா கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் படகில் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், ‘ஹோவர்கிராப்ட்’ ரோந்து கப்பல் மூலம் மண்டபம், வேதாளை, சீனியப்பன் தர்கா ஆகிய கடற்கரையோரப் பகுதிகளில் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது , வாகனத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் படகில் சில பெட்டிகளை ஏற்றுவதைக் கண்ட கடலோர காவல் படையினர், அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது படகில் இருந்த இருவர் படகுடன் கடலுக்குள் தப்பிச் சென்றனர்.

அதேநேரம், சரக்கு வாகனத்தில் இருந்தவர்கள் பெட்டிகளைக் கடற்கரையில் வீசிவிட்டு வாகனத்துடன் தப்பியோடினர்.

இதையடுத்து, கடற்கரையோரம் கைவிடப்பட்டுக் கிடந்த 12 பெட்டிகளையும் மீட்ட கடலோர காவல் படை வீரர்கள், அவற்றை மண்டபத்தில் உள்ள தங்களது முகாமிற்கு எடுத்துச் சென்று சோதனை செய்தனர்.

அதில், சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த வகையான வலி நிவாரணி மாத்திரைகள், இலங்கையில் கொக்கைன், ஹெராயின் மற்றும் மெத்தாம்பேட்டமைன் போன்ற போதைப்பொருட்களுடன் கலந்து பயன்படுத்தப்படுவதால், தமிழகத்தில் இருந்து இவை அதிகளவில் இலங்கைக்குக் கடத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்த கடலோர காவல் படையினர், தப்பியோடிய மர்ம நபர்கள் மற்றும் சரக்கு வாகனம் குறித்து மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

மேலும் தப்பியோடிய நபர்களையும் தேடி வருகின்றனர்.

Related

Tags: pain killersRameshwaramsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!

Next Post

போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை!

Related Posts

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

2026-06-29
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதே நிலையான அபிவிருத்திக்கான அடித்தளம்

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை – 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல்!
இலங்கை

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை – 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல்!

2026-06-29
Next Post
போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை!

போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை!

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

கொழும்பு மாநகர சபை மீது வழக்குப் பதிவு!

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 06 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

0
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

0
அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

0
நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

0
ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.