அண்மையில் தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளையும் எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிக்குகள் இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இணையவழி முறைமையூடாக முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தாய்லாந்திற்குச் சுற்றுலா சென்றிருந்த 22 பிக்குகள் நாட்டிற்குத் திரும்பியபோது, அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் இருந்து 112 கிலோகிராம் ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களை வலி நடத்திய மேலும் ஒரு தலைமை பிக்குவும் கைது செய்யப்பட்டார்.














