பிராண்ட் ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி இணையவழி வணிகத் திட்டத்தில் 4,26,300 ரூபாவை நிதி மோசடி செய்த குற்றத்துக்காக கம்பஹாவைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் துணைப் பிரிவினரால் அவர் நேற்று (08) கைது செய்யப்பட்டார்.
மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ. 1,86,500 அவரது கணக்கில் வரவு வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் அளிக்கப்பட்ட தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அப்பிரிவு இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது.
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.












