சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் நியாயமான காரணமின்றி தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.















