மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் தொடர்பாக நீர்க் குழாய்களை இடமாற்றம் செய்யும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (11) பல பகுதிகளில் 12 மணி நேர நீர் விநியோகம் அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
இன்று (11) மாலை 7.00 மணி முதல் நாளை (12) காலை 7.00 மணி வரை 12 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
அதன்படி, மஹர பிரதேச சபை எல்லைக்குட்பட்ட எல்தெனியா, கொனஹேன, வெபடா, சூரியபாலுவ மற்றும் உடுப்பில கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பரகந்தெனிய, கொசின்ன, அபரலுவ, இம்பல்கொட மற்றும் யகொட கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்படும்.













