Reform UK கட்சியின் தலைவர் நைஜல் ஃபாராஜ் (Nigel Farage), கிரிப்டோ பில்லியனர் கிறிஸ்டோபர் ஹார்போர்னிடமிருந்து (Christopher Harborne) ஐந்து மில்லியன் பவுண்டுகள் தனிப்பட்ட நிதி அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டதாக வெளியான தகவல் பிரித்தானிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அக்கட்சியின் பிரதித் தலைவர் ரிச்சர்ட் டைஸ் (Richard Tice), இந்த நிதி அன்பளிப்பு நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னரே பெற்றுக்கொள்ளப்பட்டதால் இதில் எவ்வித விதிமீறல்களும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தங்களது கட்சி எவ்வித விசாரணைக்கும் அஞ்சவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக நைஜல் ஃபாராஜ் நாடாளுமன்ற ஒழுக்கநெறி ஆணையாளரின் விசாரணைக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை மறைக்காமல் ஃபாராஜ் பகிரங்கமாக விளக்கமளிக்க வேண்டும் என ஆளும்கட்சியான தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது.














