இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப்படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
தற்கொலைப்படை ட்ரோன்களை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்க இந்திய விமானப்படை (ஐஏஎப்) திட்டமிட்டுள்ளது.
இதற்கான டெண்டரை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.
நிலையான இறக்கைகள் கொண்ட, ஒருமுறை மட்டுமே தாக்கக்கூடிய ஆளில்லா வான்வழி அமைப்புகள்தான் (OWA-UAS) தற்கொலைப்படை ட்ரோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படையின் 5-வது பேஸ் ரிப்பேர் டெப்போ (பிஆர்டி) ஒருங்கிணைக்கும்.
இதுவே இதற்கான முதன்மை முகமையாக செயல்படும்.
ஆயுதப் படைகள் தங்களுடைய தேவைகளை வரையறுத்து, அதற்கு ஏற்ப தொழில் துறையினர் தயாரிப்பை உருவாக்கும் வழக்கமான கொள்முதல் திட்டங்களைப் போலல்லாமல், இந்த வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுச் செயல்பாட்டில் இந்திய விமானப்படை நேரடியாகப் பங்கெடுக்கும்













