வாகனங்களைச் செலுத்தும்போது ஆசனப்பட்டி அணியும் சட்டம் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிலுள்ள அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிந்திருக்க வேண்டும்.
வாகனங்களின் முன் இருக்கைகளில் மட்டுமன்றி, பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் நேற்றுடன் (19) நிறைவடைந்துள்ளதுடன் இன்று முதல் இந்தச் சட்டம் கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.
சாதாரண வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதியும், முன் இருக்கையில் பயணிக்கும் மற்றைய பயணியும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும் அதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதி உள்ளிட்ட அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
















