கிரேட்டர் மான்செஸ்டருக்கு (Greater Manchester) அருகிலுள்ள பரந்த சதுப்பு நிலப் பகுதிகளில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில், தீயணைப்புப் படையினர் இன்றும் (26) ஈடுபட்டு வருகின்றனர்.
வியாழக்கிழமை இரவு காட்டுத்தீ முதலில் பரவத் தொடங்கியதிலிருந்து, டின்ட்விஸ்டில் (Tintwistle), ஹோலிங்வொர்த் (Hollingworth) மற்றும் வூலி பிரிட்ஜ் (Woolley Bridge) கிராமங்கள் மீது அடர்த்தியான புகை மண்டலங்கள் சூழ்ந்துள்ளன.
டெர்பிஷயர் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டரைச் சேர்ந்த அவசரகால தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தில் தொடர்ந்தும் தீயை அணைக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலையில், A628 வுட்ஹெட் பாஸ் (Woodhead Pass) வீதி போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இரு திசைகளிலும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் அருகிலுள்ள ஏனைய வீதிகளும் மூடப்பட்டுள்ளன.
பொது மக்கள் இச் சாலைகளள் வழியான போக்குவரத்துப் பணிகளை தவிர்க்குமாறு பெரிய அளவிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.















