தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பார்வையிட்டார்.
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினை மாகாணத்தின் கீழிருந்து மத்திய அரசாங்கத்திற்கு கொண்டு சென்று அபிவிருத்தி செய்வது தொடர்பாக இறுதியாக இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் தேவைவைப்பாடுகள் அங்கு இருக்கும் நோயாளர்கள், மருந்து தேவைகள் அதன் இயங்கு நிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வைத்தியர்களுடன் கலந்துரையாடினார்.
குறித்த விஜயத்தின் போது கடற்றொழில்அமைச்சர் இ.சந்திரசேகரம், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி , தெல்லிப்பளை வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் கலந்து கொண்டனர்.














