கலிபோர்னியாவின் இங்கிள்வுட் நகரில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டீபன் யூஸ்டாக்கியோ இரண்டாவது பாதியின் மேலதிகே நேரத்தில் கோல் அடித்தார்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்திய கனடா, 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் தனது முதல் நாக்-அவுட் சுற்று வெற்றியையும், வரலாற்றிலேயே முதல் முறையாக ‘ரவுண்ட் ஆஃப் 16’ (16 அணிகள் கொண்ட சுற்று) சுற்றை எட்டிய சாதனையும் படைத்தது.
சோஃபி (SoFi) மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டம் மேலதிக நேரத்தை நோக்கிச் செல்லும் என்று தோன்றிய நிலையில் யூஸ்டாக்கியோ, பெனால்டி பகுதிக்கு வெளியிலிருந்து ஒரு அற்புதமான ‘volley’ ஷாட் மூலம் பந்தை வலைக்குள் செலுத்தி அதை கோலாக மாற்றினார்.
இதனால் போட்டியை நடத்தும் இணை நாடான கனடா 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது.
கனடா அடுத்த சுற்று ஆட்டத்தில் எதிர்வரும் சனிக்கிழமையன்று ஹூஸ்டனில் நெதர்லாந்து அல்லது மொராக்கோ அணிகளை கொள்ளும்.
தங்கள் வரலாற்றில் மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் கனடா அணி, தனது முதல் மூன்று போட்டிகளை டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள சொந்த மைதானங்களில் விளையாடியது.
ஆனால், கடந்த புதன்கிழமையன்று சுவிட்சர்லாந்திடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடாக இருந்தும் வெளியூர் மைதானத்தில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணி தள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
















