அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ரூ.100,000/= அபராதம் விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, 2 கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி அரிசி பொதியை அரசாங்கம் நிர்ணயித்திருந்த கிலோ ஒன்றிற்கான ரூ.255/ கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.














