ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் செவ்வாய்க்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடந்தப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி எகிப்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி, 2026 ஃபிஃபா உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறும் வகையில் ஒரு அற்புதமான மீட்சியை நிகழ்த்தியுள்ளது.
அதேநரேம், இந்தத் தோல்வுடன் எகிப்து அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கால்பந்து உலகக் கிண்ணப் பயணம் முடிவுக்கு வந்தது.
இத் தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆர்ஜென்டினா அணி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் களமிறங்கியது.
ஆட்டத்தின் முதல் பாதியின் 15-வது நிமிடத்தில் எகிப்து அணி வீரர் யாசர் இப்ராஹிம் தலையால் முட்டி கோல் அடித்து ஆட்டத்தைத் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து 67-வது நிமிடத்தில், குறுக்காக வந்த பந்தை முஸ்தபா ஜிகோ கோலாக மாற்றி எகிப்தின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.
21-வது நிமிடத்தில், தடுப்பாட்ட வீரர் நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ ஒரு பெனால்டியை பெற்றுத் தந்ததால் ஆர்ஜென்டினாவுக்கு பதிலடி கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் எகிப்திய கோல்கீப்பர் முஸ்தபா அகமட் ஷோபெய்ர், லியோனல் மெஸ்ஸியின் பெனால்டி முயற்சியைத் தடுத்தார்.
79-வது நிமிடத்தில் கிறிஸ்டியன் ரொமேரோ மூலம் ஆர்ஜென்டினா ஒரு கோலைத் திருப்பியடித்தது.
அதன் பின்னர் 5 நிமிடங்களுக்குள் அதாவது போட்டியின் 83-வது நிமிடத்தில் மெஸ்ஸி சமன் செய்யும் கோலை அடித்தார்.
இது தொடர்ந்து ஒன்பதாவது உலகக் கிண்ண ஆட்டத்தில் அவரால் அடிக்கப்பட்ட கோல் ஆகும்.
இது நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் அவர் அடித்த எட்டாவது கோல் ஆகும்.
இந்தக் கோலுடன் தங்கப் பூட் விருதுகளை வெல்லும் வீரர் பட்டியலில் அவர் முன்னிலைப் பெற்றார்.
கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில், என்சோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி கோல் அடித்து ஆர்ஜென்டினாவை 3-2 என முன்னிலைப்படுத்தினார்.
இறுதியாக ஆர்ஜென்டினா அணி எகிப்தை 3-2 என்ற கணக்கில் எகிப்தை வீழ்த்தியது.
வெற்றியின் களிப்பில் மெஸ்ஸி தனது சக வீரர்களைக் கட்டித் தழுவியபோது ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
39 வயதான உலகப்புகழ் பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இவ்வணியை வழிநடத்துகிறார்; இதுவே அவரது கடைசி உலகக் கிண்ணத் தொடராகவும் அமையக்கூடும்.
ஜூலை 11-ஆம் திகதி நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் அவர்கள் சுவிட்சர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளனர்.

இந்தப் போட்டியில் தோல்வியைச் சந்தித்த போதிலும், தனது வரலாற்றிலேயே முதல் முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், உலகக் கிண்ணப் போட்டிகளில் எகிப்து இதுவரை இல்லாத அளவிலான சிறந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்தது.
குழுச் சுற்றில் நியூசிலாந்தை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம், உலகக் கிண்ணப் போட்டிகளில் எகிப்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
‘Pharaohs’ என்று அழைக்கப்படும் எகிப்திய அணி, இதற்கு முன் 1934, 1990 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இப்போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதோ அல்லது குழுச் சுற்றைத் தாண்டி முன்னேறியதோ இல்லை.
லிவர்பூல் நட்சத்திர வீரர் மொஹமட் சலா தலைமையிலான எகிப்து அணி, நியூசிலாந்தை வீழ்த்தியும், பெல்ஜியம் மற்றும் ஈரானுடன் சமன் செய்தும், ஐந்து புள்ளிகளுடன் பெல்ஜியத்திற்குப் பின்னால் இரண்டாம் இடத்தைப் பிடித்து, குழுச் சுற்றில் தோல்வியின்றி முன்னேறியது.
பின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றில், மேலதிக நேரத்திலும் இரு அணிகளும் சமநிலையில் இருந்த நிலையில், பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, எகிப்து முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
எகிப்தின் தலைசிறந்த முன்னாள் வீரர்களில் ஒருவரான பயிற்சியாளர் ஹொசாம் ஹசன், உலகக் கிண்ணத்தில் தனது நாட்டை இதுவரை இல்லாத சிறந்த நிலைக்கு வழிநடத்தியதற்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
எகிப்தின் போட்டி அட்லாண்டாவில் முடிவடைந்தாலும், உலகின் மிகப்பெரிய மேடையில் தாக்கத்தை ஏற்படுத்த பல தசாப்தங்களாகப் போராடி வந்த ஒரு தேசிய அணிக்கு, இந்த அணியின் பயணம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
எகிப்து வெளியேற்றப்பட்ட நிலையில், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து உலகக் கிண்ணத்தில் இன்னும் களத்தில் இருக்கும் ஒரே அணியாக மொராக்கோ உள்ளது.
16-வது சுற்றில் கனடாவை வீழ்த்தி முன்னேறிய அட்லஸ் லயன்ஸ் அணி, வியாழக்கிழமை அன்று காலிறுதிப் போட்டியில் பிரான்சை எதிர்கொள்ளும்.













